முகப்பு
இந்தியா

அழகைச் சிதைக்க கணவன் முகத்தில் ஆசிட் ஊற்றிய மனைவி: உயிரிழப்பு நேர்ந்த விபரீதம்

பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவனின் முகத்தை ஆசிட் ஊற்றிச் சிதைக்க நினைத்த மனைவி, அவரது கணவன் எதிர்பாராதவிதமாக பலியானதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 30 ஏப்ரல், 2018 at 2:02 PM
பகிர்:

திருவனந்தபுரம்: பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவனின் முகத்தை ஆசிட் ஊற்றிச் சிதைக்க நினைத்த மனைவி, அவரது கணவன் எதிர்பாராதவிதமாக பலியானதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் போத்தன்சேரியை சேர்ந்தவர் பஷீர். இவரது மனைவி சுபைதா. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் நள்ளிரவில் இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் பஷீரின் முகத்தில் ஆசிட் ஊற்றி விட்டு தப்பி ஓடி விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.. இதன் காரணமாக பஷீரின் முகம் சிதைந்து கோரமானது.

அண்டை வீட்டார் உதவியுடன் பஷீரை அங்குள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சுபைதா சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

Advertisement

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விவசாரித்து வந்தனர். இந்நிலையில்  கடந்த 21-ந்தேதி சிகிச்சை பலனின்றி பஷீர் பரிதாபமாக இறந்தார். ஆசிட் வீசிய மர்ம நபர் குறித்து பல்வேறு கோண விசாரணைகளுக்குப் பின்னர் பஷீரின் மனைவி சுபைதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் சுபைதாவிடம்  நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள்  வெளிவந்தன. விசாரணை அதிகாரிகளிடம் அவர் கூறியதாவது:

எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதனை நான் தட்டிக்கேட்டேன். ஆனால் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. பல பெண்களுடன் இவ்வாறு அவர் நடந்து கொள்ள அவரது முக அழகுதான் காரணம் என்று நினைத்தேன். எனவே அவரது முகத்தை சிதைத்தால் வேறு எந்த பெண்ணும் எனது கணவரை பார்க்க மாட்டாள் என்று நினைத்த நான் இவ்வாறு செய்தேன்.முகத்தை கோரமாக்க வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம். ஆனால் அவரது மரணம் எதிர்பாராதது .

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் சுபைதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் வேறு யாருக்கேனும் இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.