இந்தியா

எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவை சந்தித்த ராகுல் காந்தி 

DIN

புதுதில்லி: உடல்நலக் குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். 

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவிற்கு, மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மொத்தமாக 27 வருடங்கள் சிறைத் தண்டனையும், 60 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இதன் காரணமாக ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த லாலு பிரசாத் யாதாவுக்கு கடந்த மாதம் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். 

இந்த சந்திப்பின் போது லாலு பிரசாத் யாதவின் உடல் நலம் குறித்து ராகுல் காந்தி விசாரித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பாஜகவுக்கு எதிராக பிற கட்சிகளை அணி திரட்டுவது தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை செய்ததாகத் தெரிகிறது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT