முகப்பு
இந்தியா

ஸ்மார்ட்போன்கள் விலை அதிகமா?கவலை வேண்டாம்: வாடகைக்கு எடுக்கலாம் தெரியுமா? 

நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஸ்மார்ட்போன்கள் விலை அதிகம் என்று கவலைப்பட வேண்டாம்; அவற்றை வாடகைக்கு எடுக்கும் புதிய நடைமுறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Updated On : 16 ஆகஸ்ட், 2018 at 1:44 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:01 PM

பெங்களூரு: நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஸ்மார்ட்போன்கள் விலை அதிகம் என்று கவலைப்பட வேண்டாம்; அவற்றை வாடகைக்கு எடுக்கும் புதிய நடைமுறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கர்நாடகவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் 'ரென்டோ மோஜோ' . வீட்டு உபயோகப்  பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறது. தற்பொழுது இந்நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள மின்னணுப் பொருட்கள் வாடகை பகுதியில் ஸ்மார்ட்போன்கள்  வாடகைக்கு கிடைக்கிறது. மிகவும் குறைந்தபட்சமாக மாதம் ரூபாய் 399 செலுத்தி நாம் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தலாம்.

தற்போது மிகவும் விலையுயர்ந்த ஆப்பிள் ஐபோன் X (64 GB) அலைபேசியானது ரூ.4299 மாத வாடகைக்கு கிடைக்கிறது.  இதை பயன்படுத்துவதற்கு நாம் திருப்பிக் கிடைக்கக் கூடிய 'காப்பபுத் தொகையாக' ரூ. 9998 செலுத்த வேண்டும். எனவே இந்தவகை அலைபேசியை நாம் முதன்முறையாக பயன்படுத்த செலுத்த வேண்டிய தொகையானது ரூ. 15000 -க்கும் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மற்றொரு சுவராஸ்யமாக குறிப்பிட்ட வகை அலைபேசியினை நீங்கள் 24 மாதங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திய பிறகு, அதைச் சொந்தமாக்கிக் கொள்ள விரும்பினால் எடுத்துக் கொள்ளலாம். தற்சமயம் ஐபோன் X வகை அலைபேசிக்கு இந்த வகையில் இறுதியாக செலுத்த வேண்டிய தொகை ரூ.15556 ஆகும்.   

இவை மட்டுமல்லாது சாம்சங் கேலக்சி S9, சாம்சங் நோட் 8, ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் கூகிள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர் உள்ளிட்ட கருவிகளும் வாடகைக்கு கிடைக்கின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.