இந்தியா

எனக்கே சூனியம் வைக்கிறாயா?: சந்தேகத்தில் தாயின் கழுத்தை நெரித்துக் கொன்ற மகன் 

தனக்கு சூனியம் வைக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் தாயின் கழுத்தை மகன் நெரித்துக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ANI

ராஜன்னா சிர்கில்லா (தெலங்கானா): தனக்கு சூனியம் வைக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் தாயின் கழுத்தை மகன் நெரித்துக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இதுகுறித்து ராஜன்னா சிர்கில்லா மாவட்டம் பொய்ன் பல்லே போலீஸ் நிலைய தரப்பில் கூறப்படுவதாவது:

கடந்த 23-ஆம் தேதி ஸ்ரீனிவாஸ் என்னும் நபர் தனது தாயாரை வீட்டிலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். தனது தயார் பில்லி சூனிய பயிற்சிகள் மேற்கொள்வதாகவும், தனக்கே அவர் சூனியம் வைப்பதாகவும் ஸ்ரீனிவாஸ் சந்தேகம் அடைந்துள்ளார். அதன் காரணமாகவே தனக்கு அடிக்கடி உடல்நலம் இல்லாமல் போவதாகவும்  அவர் எண்ணியுள்ளார். 

எனவே இதற்கு காரணமான தனது தாயாரைக் கொன்று விடுவது என்று திட்டமிட்ட அவர் 23-ஆம் தேதியன்று வீட்டிலிருந்த போது, 52 வயதான தாயாரை கொடூரமாக கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.      

இ.பி.கோ 302-ஆவது பிரிவின் கீழ் ஸ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

SCROLL FOR NEXT