FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பஞ்சாப் குண்டுவீச்சு சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது: அம்ரீந்தர் சிங் குற்றச்சாட்டு 

பஞ்சாபில் நிராங்காரி சாமியார் ஆசிரமத்தில் நடந்த குண்டுவீச்சு சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்று மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார். 

30 ஜனவரி 2024, 11:11 pm IST
பகிர்:

அமிர்தசரஸ்:  பஞ்சாபில் நிராங்காரி சாமியார் ஆசிரமத்தில் நடந்த குண்டுவீச்சு சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்று மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார். 
  
பஞ்சாபின் அமிர்தசரஸ் அருகே உள்ள ஆதிவால் கிராமத்தில் நிராங்காரி என்னும் சாமியாரின் ஆசிரமம் உள்ளது. இங்கு கடந்த 18 ம் தேதி, 200-க்கும் மேற்பட்ட மக்கள், பிரார்த்தனைக்காக கூடியிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி, ஆசிரம வளாகத்துக்குள் புகுந்தனர். 

பின்னர் அங்கு கையெறி குண்டை வீசி விட்டு அவர்கள் தப்பியோடினர். அந்த குண்டு வெடித்ததில், மூன்று பேர் உயிரிழந்தனர். காயமடைந்த, 10 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கையெறி குண்டை வீசிய ஒரு நபரை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு நபரைத் தேடும் பணி நடந்து வருகிறது. 

இந்நிலையில் குண்டுவீச்சு சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்று மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.  

Advertisement

Advertisement

இது தொடர்பாக புதனன்று முதல்வர் அம்ரீந்தர் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:

கையெறி குண்டு வீசப்பட்டதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐ அமைப்பு மூளையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

வீசப்பட்ட குண்டு, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை குண்டுகள்தான் காஷ்மீரிலும் ராணுவத்தினர் மீது வீசப்படுகிறது. 

சம்பவத்தில் தொடர்புடைய முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். வெகுவிரைவில் இரண்டாவது குற்றவாளி கைது செய்யப்படுவான். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments