இந்தியா

கரும்புதான் சர்க்கரை நோய்க்கு காரணம்: உத்தரபிரதேச முதல்வரின் புதிய கண்டுபிடிப்பு

DIN

லக்னௌ: கரும்புதான் சர்க்கரை நோய் வரக் காரணமாகிறது என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதனன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நமது விவசாயிகள் வெறும் கரும்பு மட்டுமே உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தக் கூடாது. வேறு பயிர்களையும் பயிரிடவேண்டும். அதிகமான கரும்பு விளைச்சலின் காரணமாக அதன் பயன்பாடு அதிகமாகும். அது சர்க்கரை நோய்க்கு காரணமாக அமையும். 

எனவே விவசாயிகள் காய்கறிகளை விளைவிப்பதிலும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும், காய்கறிகளுக்கு தற்போது தில்லி மார்க்கெட்டில் அதிக விலை கிடைக்கிறது. 

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT