முகப்பு
இந்தியா

காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்: எல்லையில் பதற்றம்; உஷார் நிலை! 

காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, எல்லையில் உச்ச கட்ட பதற்றம் நிலவருகிறது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:50 AM
பகிர்:

காஷ்மீர்: காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, எல்லையில் உச்ச கட்ட பதற்றம் நிலவருகிறது.

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச கவனத்திற்கு கொண்டுசெல்ல பாகிஸ்தான் முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சீனாவின் துணையுடன் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வெள்ளியன்று ஒரு அதிகாரப்பூர்வமற்ற விவாதம்  நடைபெற உள்ளது.

இந்நிலையில் காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, எல்லையில் உச்ச கட்ட பதற்றம் நில வி வருகிறது.

இதுதொடர்பாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல்களாவன:

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற குழுக்கள் காஷ்மீரில் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்த  திட்டமிட்டுள்ளன.

இதன்மூலம் எல்லையில் பதற்றத்தை தூண்ட பாகிஸ்தான் முயலுகிறது.

எனவே ராணுவம், விமானம் மற்றும் மற்ற பாதுகாப்பு படைகள் உச்ச பட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

முன்னதாக ஜம்மு காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என்றும்,  அதே சமயம், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் ஜம்மு காஷ்மீர்  தலைமைச் செயலர் சுப்ரமணியம் வெள்ளிக்கிழமை மதியம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →