இந்தியா

உலகின் மிகப் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இடம்பெற்ற இரண்டே இந்திய நகரங்கள்!

DIN

உலகின் மிகப் பாதுகாப்பான நகரங்களின் வரிசையில் இந்தியாவின் தலைநகர் தில்லி இடம்பிடித்துள்ளது. 60 நகரங்களைக் கொண்ட பட்டியலில் 55 புள்ளிகளுடன் 52வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

பொருளாதார பாதுகாப்பு நகரங்களின் குறியீடு பட்டியல் 2019ல் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

57 விஷயங்களை அடிப்படையாக எடுத்து ஆய்வு செய்து உலகின் முக்கிய நகரங்கள் 60ஐ அலசி ஆராய்ந்து இங்கு பட்டியலிட்டுள்ளது. இதில் முக்கிய விஷயமாக டிஜிட்டல், சுகாதாரம், கட்டமைப்பு, தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்ட 4 முக்கிய விஷயங்கள் அடிப்படையாக அமைந்துள்ளன.

தில்லியுடன் இந்தியாவைச் சேர்ந்த மேலும் ஒரே ஒரு நகரம் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அது, நமது நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பை. அது 58.2 புள்ளிகளுடன் 45வது இடத்தை லிமா என்ற நகரத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளது. 

2017ல் வெளியான இதே பட்டியலில் இந்தியாவின் தில்லி 62.34 புள்ளிகளைப் பெற்று 43வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு 9 இடங்கள் சரிந்து 52வது இடத்தில் உள்ளது. அதே சமயம் வாஷிங்டன் 23வது இடத்தில் இருந்து, இந்த ஆண்டு 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய - பசிஃபிக் நாடுகளைச் சேர்ந்த நகரங்களே முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. ஜப்பானின் டோக்கியோ முதல் இடத்தில் நீடிக்கிறது. கடைசி இடத்தில் நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகர் பிடித்துள்ளது.

மேலும் படிக்க..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT