முகப்பு
இந்தியா

மதுரை பாணியில் போஸ்டர் போட்டு மிரட்டும் காங்கிரஸார்: என்ன செய்யப் போகிறார் பிரியங்கா?

உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பொதுச் செயலராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தீவிர அரசியலில் ஈடுபடாமல் முக்கியக் கட்சிப் பதவி கிடைத்துள்ளது பிரியங்காவுக்கு.

Updated On : 26 ஜனவரி, 2019 at 3:27 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:28 PM

லக்னௌ: உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பொதுச் செயலராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தீவிர அரசியலில் ஈடுபடாமல் முக்கியக் கட்சிப் பதவி கிடைத்துள்ளது பிரியங்காவுக்கு.

இந்த நிலையில், அவரை வாழ்த்தி உத்தரப்பிரதேச காங்கிரஸ் தொண்டர்கள் போஸ்டர் போட்டு சூட்டைக் கிளப்பி வருகிறார்கள்.

வாராணசி பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியிருக்கும் போஸ்டரில், வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை பிரியங்கா காந்தி எதிர்கொள்ள வேண்டும் என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதாவது காசி நகரின் மக்கள் பிரதிநிதியாக பிரியங்கா காந்தி வர வேண்டும் என்று ஹிந்தியில் அச்சிடப்பட்டுள்ளது.

Advertisement

அது மட்டுமல்ல, இது பற்றி காங்கிரஸ் தொண்டர்கள் சொல்வதைக் கேட்டால் ஆடிப்போய்விடுவோம். வாராணசி எம்.பி.யாக பிரியங்கா வர வேண்டும். இங்கே போட்டியிட்டு அவர் வெற்றி பெறுவார் என்பதை எங்களால் உறுதியாகக் கூற முடியும். அதை செய்து காட்டுவோம். இதன் மூலம் பிரதமர் மோடிக்கு பாடம் புகட்ட வேண்டும். இனி அவர் எப்போதுமே வாராணசி பக்கமே வரக் கூடாது என்கிறார்கள்.

ஆனால் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியினர் இருவேறு கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். அதாவது ஒன்று பிரியங்கா காந்தி சோனியாவின் ரே பரேலி தொகுதியிலோ அல்லது ராகுலின் அமேதி தொகுதியிலேயோ தான் போட்டியிட வேண்டும். ராகுல் வேண்டுமானால் வேறு தொகுதியில் போட்டியிடலாம் என்கிறார்கள்.

முதன் முதலில் அரசியலில் குதித்திருக்கும் பிரியங்காவுக்கு பாதுகாப்பான தொகுதியையே ஒதுக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.