முகப்பு
இந்தியா

பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியில் இருந்து நவ்ஜோத்  சிங் சித்து ராஜிநாமா 

பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ராஜிநாமா செய்துள்ளார்.

Updated On : 14 ஜூலை, 2019 at 5:11 PM
பகிர்:

சண்டிகர்: பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ராஜிநாமா செய்துள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் ஆட்சியில் மாநில சுற்றுலா மற்றும் கலாசார விவகாரத் துறை அமைச்சராக இருந்தவர் நவ்ஜோத் சிங் சித்து.  முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுடன், அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியில் இருந்தும் எதிர்ப்பு குரல் வலுத்தது.  ஆனால் சித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் எனக்கு முறைப்படி அழைப்பு விடப்பட்டதாகவும், அதனை மதித்தே பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதாக தனது தரப்பு நியாயத்தினை விளக்கினார். 

Advertisement

எனினும் இந்த விவகாரத்தின் காரணமாக மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கும் சித்துவுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து பேசினார். இதனால் சித்துவும் வருத்தத்திலிருந்தார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ராஜிநாமா செய்துள்ளார்.

பதவி விலகல் கடித நகலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.  கடந்த ஜூன் 10 என தேதியிடப்பட்ட கடிதமானது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.