இந்தியா

எம்.எல்.ஏ.வைக் கடத்தி விட்டனர்: அமைச்சர் குற்றச்சாட்டால் கர்நாடக பேரவையில் அமளி 

DIN

பெங்களூரு: எம்.எல்.ஏ.வை பாஜகவினர் கடத்தி விட்டனர் என்ற அமைச்சர் சிவகுமாரின் குற்றச்சாட்டால் கர்நாடக சட்டப்பேரவையில் அமளி நிலவி வருகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக சட்டப்பேரவையில் வியாழனன்று குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது.

அதற்கு முன்னதாக அவையில் உருக்கமாக  பேசிய முதல்வர் குமாரசாமி,  'கர்நாடகாவில் நடப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சபாநாயகரின் அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் சில எம்எல்ஏக்கள் செயல்பட்டுள்ளனர். ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்' என்று பேசினார்.

இந்நிலையில் தங்கள் கட்சி எம்.எல்.ஏவை பாஜகவினர் கடத்தி விட்டனர் என்ற அமைச்சர் சிவகுமாரின் குற்றச்சாட்டால் கர்நாடக சட்டப்பேரவையில் அமளி நிலவி வருகிறது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வாக்கெடுப்பிற்காக அவை கூடியதும் எழுந்த காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர் சிவக்குமார் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை பாஜகவினர் கடத்தி விட்டனர் என்று குற்றம் சாட்டினார்.

நேற்றுவரை தங்களுடன் இருந்த ஸ்ரீமந்த் பாட்டீல் மும்பையில் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் இணைந்துள்ளார். எனவே ஸ்ரீமந்த் பாட்டீலை பாஜக கடத்திச் சென்றதாக பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவரது புகைப்படத்தை காண்பித்து அமளியில் ஈடுபட்டனர். அதற்கு பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர் .

இதனிடையே உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று காங்கிரசின்  சித்தராமையா வேண்டுகோள் வைத்தார்.

இறுதியாக காங்கிரஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியின் காரணமாக சபை அரைமணி  நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT