தில்லியில் ரூ. 600 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்
தலைநகர் தில்லியில் ரூ. 600 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியாதில்லியில் ரூ. 600 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்
தலைநகர் தில்லியில் ரூ. 600 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
புது தில்லி: தலைநகர் தில்லியில் ரூ. 600 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியாவில் பெரும் நகரங்களில் போதைப்பொருட்கள் நடமாட்டம் சமீபமாக அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் எல்லையின் வழியாக போதைப்பொருட்கள் இந்தியாவிற்குள் கடத்தப்படுகிறது. இதனால் எல்லையில் தீவிர கண்காணிப்பு தொடர்கிறது.
இந்நிலையில் தலைநகர் தில்லியில் ரூ. 600 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தில்லியில் சிறப்புப் படை போலீஸ் அதிரடியாக மேற்கொண்ட சோதனையில் சுமார் 150 கிலோ எடையிலான ஹெராயின் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அதனுடைய மதிப்பு ரூ. 600 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் நாட்டைப் சேர்ந்த ஒருவர் உள்பட 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.