இந்தியா

சிதறிய பாலுக்கு இனி அழுவதில் பயனில்லை: மோடியைக் கலாய்த்த மாயாவதி 

சிதறிய பாலுக்கு இனி அழுவதில் பயனில்லை என்று வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரம் குறித்து பிரதமர் மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

IANS

லக்னௌ: சிதறிய பாலுக்கு இனி அழுவதில் பயனில்லை என்று வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரம் குறித்து பிரதமர் மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

கடந்த மாதம் 30-ஆம் தேதி மோடி பதவியேற்ற பின்னர்  மத்திய புள்ளியியல் துறை சார்பாக வேலைவாய்ப்பின்மை தொடர்பாக புள்ளிவிவரம் ஒன்று வெளியிடப்பட்டது. அதனபடி இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத  அளவிற்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிதறிய பாலுக்கு இனி அழுவதில் பயனில்லை என்று வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரம் குறித்து பிரதமர் மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்ற உடனேயே மத்திய புள்ளியியல் துறை சார்பாக வேலைவாய்ப்பின்மை தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில், இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத  அளவிற்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்நாட்டின் ஏழை மக்களுக்கோ அல்லது வேலை வாய்ப்பின்மையால் பலியானவர்களுக்கோ மனம் வருந்த வேண்டிய தேவையில்லை. அதற்கான காலம் கடந்து தற்போது மிகவும் தாமதமாகி விட்டது. சிதறிய பாலுக்கு இனி அழுவதில் எந்த பயனுமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு குறைந்துள்ளது தொடர்பாகவும் மாயாவதி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருக்கும் அவெஞ்சர்ஸ்!

சென்னையில் நாளை கனமழை! 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!!

உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை கேரளம் செல்கிறார்!

நெருப்பில் இருந்து பிறந்தவள்... திரௌபதி 2 பட க்ளிம்ஸ் விடியோ!

பொங்கல் திருநாள்! அரசுப் பேருந்துகளில் 1.21 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT