இந்தியா

மசூத் அஸாரை விடுவித்தது யார் என்பதை நாட்டுக்கு சொல்லுங்கள்: மோடிக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதி மசூத் அஸாரை விடுவித்த பாஜக அரசு தான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

PTI


ஹவேரி: பயங்கரவாதி மசூத் அஸாரை விடுவித்த பாஜக அரசு தான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

அதாவது, கந்தகார் விமானக் கடத்தலின் போது பாஜக தலைமையிலான அரசு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அஸாரை விடுவிக்காமல் போயிருந்தால் புல்வாமா தாக்குதலே நடந்திருக்காதே என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல், விமானக் கடத்தலின் போது பயணிகளை விடுவிக்க, பயங்கரவாதி மசூத் அஸாரை விடுவிப்பது என்ற வாஜ்பாயி அரசின் முடிவை கடுமையாக விமரிசித்திருக்கும் ராகுல், காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்துக்கு எப்போதும் அடிபணிந்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சீனப் பிரதமருடன் படகில் அமர்ந்து மோடி படகுப் பயணம் செய்து கொண்டிருந்த போது சீன ராணுவம் இந்திய எல்லைக்குட்பட்ட டோக்லாமை கைப்பற்றியது. இது உலகுக்குத் தெரியும். ஆனால் அது அப்போது மோடிக்கு தெரிந்திருக்கவில்லை என்றும் ராகுல் மிகக் காட்டமாகப் பேசினார்.

மோடி ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறுகிறார். ஆனால் அவர்தான் ஊழலே. அனில் அம்பானியின் பாக்கெட்டில் மோடி ரூ.30 ஆயிரம் கோடியை போட்டுள்ளார் என்றும் ராகுல் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT