இந்தியா

என்ன இருந்தாலும் அவர் நம் பிரதமர்: காங்கிரசைக் கண்டித்த நடிகர் மாதவன்

DIN

மும்பை: என்ன இருந்தாலும் அவர் நம் பிரதமர் என்று மோடிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை நடிகர்  மாதவன் கண்டித்துளார்.

ஜெ.இ.எம் தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என்று  ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மூலமாக அறிவிக்கச் செய்ய இந்தியா முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆனால் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான சீனா இந்த முயற்சியை தனது 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி தொடந்து தடுத்து வருகிறது.  

இதை எதிர்த்து பிரதமர் மோடி தீவிரமாகச் செயல்படவில்லை என்று காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. அதையொட்டி சீனப் பிரதமர் சி ஜின்பிங்  கடைசியாக இந்தியா வந்தபோது அவருக்கும் மோடிக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்கள் மற்றும் காட்சிகளை இணைத்து நகைச்சுவை விடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி உருவாக்கியுள்ளது.  அந்த விடியோவானது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வியாழன் அன்று வெளியிடப்பட்டது    

இந்நிலையில் என்ன இருந்தாலும் அவர் நம் பிரதமர் என்று மோடிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை நடிகர்  மாதவன் கண்டித்துளார்.

காங்கிரஸ் கட்சி பகிர்ந்திருந்த விடியோவை 'ரி-ட்வீட்' செய்து கீழ்கண்டவாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT