இந்தியா

உத்தரப் பிரதேச பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரை நீக்கி ஆளுநர் நடவடிக்கை

உத்தரப் பிரதேச பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரை நீக்கி அம்மாநில ஆளுநர் திங்கள்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.

PTI

உத்தரப் பிரதேச பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரை நீக்கி அம்மாநில ஆளுநர் திங்கள்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, உத்தரப் பிரதேச அரசிலும் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில், அக்கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் சமீபகாலங்களில் பாஜக குறித்து அவதூறு விமர்சனங்களை பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பாஜக-வினரை செருப்பால் அடிக்க வேண்டும் என்றும் பொது மேடையில் பேசியுள்ளார். 

அதுமட்டுமல்லாமல் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்களை சில தொகுதிகளில் களமிறக்கியுள்ளார். மேலும் இதர தொகுதிகளில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் அதிருப்தியடைந்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக ஓம் பிரகாஷ் ராஜ்பரை மாநில அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ராம் நாயக்கிடம் பரிந்துரை செய்தார். 

இதையடுத்து அவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டார். மேலும் அக்கட்சியைச் சேர்ந்த இதர அமைச்சர்களும் நீக்கப்படுவார்கள் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

கடந்த 2017 உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 4 இடங்களில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!

ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

2025ல் ஹூண்டாய் க்ரெட்டா: விற்பனையில் முன்னணி!

SCROLL FOR NEXT