இந்தியா

கர்நாடகத்தின் நிலை அனைவரும் அறிந்ததுதான்: துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா

DIN

ரோஷன் பெய்க் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து, அதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

மாநிலத் தலைவர் கே.சி.வேணுகோபால் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா குறித்து ரோஷன் பெய்க் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து தெரிவிக்க தகுதியான ஒரே நபர் கே.சி.வேணுகோபல் மட்டும் தான். 

இங்கு நடைபெற்று வரும் அரசியல் நகர்வுகள் அனைவரும் அறிந்தது தான். அதில் எந்த ஒளிவு, மறைவும் இல்லை. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வேணுகோபால் தலைமையில் மூத்த தலைவர்கள் இணைந்து ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நகர்வு குறித்து தெரிவிப்பார்கள். 

வறட்சி நிதயாக ரூ.2,600 கோடி தேவை என்று கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு வெறும் ரூ.900 கோடியை மட்டுமே வழங்கியுள்ளது. ஆனால், மஹாராஷ்டிராவுக்கு ரூ.4 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. இதன்மூலம் கர்நாடகத்தை மத்திய அரசு புறக்கணிப்பது அம்பலமாகியுள்ளது என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT