இந்தியா

மே 3 ஆம் தேதி வரை எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?

DIN

கரோனா பரவல் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பின் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரவிட்டார். 

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளில் மே 3 ஆம் தேதி வரை எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்? என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

► உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் விமான சேவை அனைத்தும் மே 3 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

► நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளுக்கும் விதிக்கப்பட்ட தடை தொடரும்.

► பேருந்து சேவை, மெட்ரோ ரயில் சேவை ரத்து தொடரும். 

► மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து. அதே நேரத்தில் மருத்துவத் தேவைக்காக மட்டும் அனுமதி வழங்கப்படும்.

► அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள், தொழிற்பயிற்சிக் கூடங்கள், பயிற்சிக் கூடங்கள் அனைத்துமே மே 3 வரை செயல்பட அனுமதி இல்லை.

► ஆட்டோ, கால் டாக்சி, ரிக்ஷா உள்ளிட்டவைகளுக்கான தடை தொடரும்.

► திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கடைகள்,  கலை நிகழ்ச்சிக் கூடங்கள் உள்ளிட்டவைகளுக்குத் தடை தொடரும்.

► சமூக, அரசியல் நிகழ்வுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள் சார்ந்த நிகழ்ச்சிகள், திருமணங்ககளுக்குத் தடை நீட்டிப்பு. 

► மதரீதியான கூட்டங்கள் எதுவும் மே 3 வரை நடத்தக் கூடாது.

► இறுதிச்சடங்கு நடத்த தடையில்லை. ஆனால், இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொள்ளக் கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT