முகப்பு
இந்தியா

எடியூரப்பா உடல்நிலை சீராக உள்ளது: மணிபால் மருத்துவமனை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா உடல்நிலை சீராக உள்ளதாக மணிபால் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Updated On : 3 ஆகஸ்ட், 2020 at 7:17 PM
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா உடல்நிலை சீராக உள்ளதாக மணிபால் மருத்துவமனை தெரிவித்துள்ளது.(கோப்புப் படம்)
பகிர்:


கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா உடல்நிலை சீராக உள்ளதாக மணிபால் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து மணிபால் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:

Advertisement

"கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா லேசான கரோனா அறிகுறிகளுடன் ஆகஸ்ட் 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. பல்துறை மருத்துவர்கள் அடங்கிய குழு அவரைக் கண்காணித்து சிகிச்சையளித்து வருகிறது." 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.