முகப்பு
இந்தியா

'கடவுளின் செயல்': நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு ப. சிதம்பரம் கேள்வி

பொருளாதார பின்னடைவை கடவுளின் செயல் என்று குறிப்பிட்டிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
நிர்மலா சீதாராமனின் 'கடவுளின் செயல்' என்ற கருத்துக்கு சிதம்பரம் கேள்வி
பகிர்:


புது தில்லி: பொருளாதார பின்னடைவை கடவுளின் செயல் என்று குறிப்பிட்டிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம்.

பொருளாதாரப் பின்னடைவை கடவுளின் செயல் என்று குறிப்பிட்டிருக்கும் கடவுளின் தூதரான மத்திய நிதியமைச்சர், பேரிடருக்கு முந்தைய தவறான பொருளாதார மேலாண்மையை எவ்வாறு வர்ணிப்பார் என்று பதிலளிக்க வேண்டும் என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பேரிடரால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவை கடவுளின் செயல் என்று கூறியதோடு, அது நடப்பு நிதியாண்டியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கடந்த வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சு குறித்து கருத்துக் கூறியிருக்கும் ப. சிதம்பரம், பேரிடர் ஒருவேளை கடவுளின் செயலாக இருந்தால், 2017 - 18, 2018 - 19, 2019 - 20ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசமான மேலாண்மையை எவ்வாறு வர்ணிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில் இருப்பதால் மாநிலங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வரிவருவாய் இழப்பை ஈடுகட்ட ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறியிருப்பதற்கும் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவையை ஈடுபட்ட மத்திய அரசு இரண்டு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. ஆனால் இரண்டுமே, ஒட்டுமொத்த பொருளாதாரப் பளுவும் மாநில அரசுகள் மீதே விழும் வகையில் உள்ளது.  இதன் மூலம், அனைத்து விதமான நிதிப் பொறுப்புகளில் இருந்தும் மத்திய அரசு தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது.  இது ஒட்டுமொத்த துரோகம் மற்றும் சட்டத்தை வெளிப்படையாகவே மீறுவதற்குச் சமம் என்றும் சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →