ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 3-ஆம் கட்ட தேர்தல்: 105 வயது மூதாட்டி வாக்களிப்பு
ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சிலின் மூன்றாம் கட்ட தேர்தலில் 105 வயது மூதாட்டியான ஆஷியன் பேகம் வெள்ளிக்கிழமை வாக்களித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சிலின் மூன்றாம் கட்ட தேர்தலில் 105 வயது மூதாட்டியான ஆஷியன் பேகம் வெள்ளிக்கிழமை வாக்களித்துள்ளார்.
யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரியாசி மாவட்டத்தில், லாஞ்சாவில் உள்ள சதேக் மொஹல்லாவின் வாக்குச் சாவடிக்கு தன் மகனுடன் முதல் நபராக மூதாட்டி வாக்களிக்க வந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
மாநில தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, டி.டி.சி தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் மொத்தம் 48.62 சதவீத மக்கள் வாக்களித்தனர். முதலாம் கட்ட தேர்தலில் 51.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
டிசம்பர் 19-ம் தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.