நாளை சோனியா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை: காங்கிரஸ்
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை தனது பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை தனது பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நாளை(டிச.9) தனது 74 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு நகரங்களில் அவரது பிறந்தநாளை கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சோனியா காந்தி தனது பிறந்தநாளை கொண்டாட மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்று நோய்ப் பரவல் மற்றும் தில்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் இந்த முடிவினை எடுத்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.