முகப்பு
இந்தியா

ஜம்முவில் மிகக் குளிரான இரவு; வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸாகப் பதிவு

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் மிகவும் குளிரான தட்பவெப்பநிலை நிலவுகிறது. ஜம்முவில் இந்த ஆண்டின் மிகவும் குளிரான இரவாக நேற்று அமைந்துள்ளது. 

Updated On : 18 டிசம்பர், 2020 at 2:18 PM
ஜம்முவில் மிகக் குளிரான இரவு; வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸாகப் பதிவு
பகிர்:


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் மிகவும் குளிரான தட்பவெப்பநிலை நிலவுகிறது. ஜம்முவில் இந்த ஆண்டின் மிகவும் குளிரான இரவாக நேற்று அமைந்துள்ளது. அங்கு 2.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளது.

டிராஸ் நகரின் உறைநிலை மிகவும் குறைந்து மைனஸ் 28.5 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் வரும் 21, 22-ஆம் தேதிகளில் மிதமான மழை அல்லது பனிமழை பெய்யக் கூடும். தற்போதைய குளிர்நிலை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 31-ஆம் தேதி வரை பெரிய அளவில் பனிமழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.