மகாராஷ்டிரம்: தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மகாராஷ்டிரத்தில் தலைமை காவலர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மகாராஷ்டிரத்தில் தலைமை காவலர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மகாராஷ்டிர மாநிலம், நல்லசோப்ரா பகுதியில் துலின்ஜ் காவல் நிலையம் உள்ளது. இக்காவல் நிலையித்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் சஹாராம் போயே(41).
நேற்று இரவு பணியில் இருந்த இவர் இன்று காலை காவல்நிலையத்தில் உள்ள கழிப்பறையில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு சக காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சஹாராம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர்.
காவலர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரிவரவில்லை. எனினும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தில் தலைமை காவலர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.