இந்தியா

முசாபர்நகர் வன்முறை: பாஜக எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறும் உ.பி. அரசு

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஏற்பட்ட கலவர வழக்கில் தொடர்புடைய 3 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் கலவரம் வெடித்தது. இதில் 65 பேர் கொல்லப்பட்டனர். மேலும் கலவரத்தின் காரணமாக சுமார் 40 ஆயிரம் பேர் அந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மொத்தம் 510 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 175 குற்றப்பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இந்த வன்முறை சம்பவத்தைத் தூண்டும் விதமாக வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டதாக பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கீத் சோம், சுரேஷ் ராணா மற்றும் கபில் தேவ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜக தலைமையிலான காப்செளதரிகளின் குழு லக்னோவில் முதலமைச்சர் ஆதித்யநாத்தை சந்தித்து, கலவரத்தில் ஈடுபட்ட இந்துக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுமாறு கோரியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கையை உத்தரப்பிரதேச பாஜக அரசு மேற்கொண்டுள்ளது.

முசாபர்நகர் அரசு வழக்கறிஞர் ராஜீவ் சர்மா, “வழக்குகளைத் திரும்பப் பெறும் விண்ணப்பம் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT