திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: அமித் ஷா
விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைக்கு திறந்த மனதுடன் தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைக்கு திறந்த மனதுடன் தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து தவறான வழியில் விவசாயிகள் வழிநடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தில்லி மெஹ்ராலி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அமித் ஷா, ''9 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என 18 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார்.
பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பி நரேந்திர மோடி என்பது தெரிகிறது.
குறைந்த பட்ச ஆதரவு விலை விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர். இதனை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்த ஆபத்தும் நேராது.
மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு ஆதரவானதுதான். யாராலும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அல்லது விவசாயிகளின் நிலத்தை பறிக்க முடியாது. விவாசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு திறந்த மனதுடன் தயாராகவுள்ளது என்று கூறினார்.