முகப்பு
இந்தியா

பேரவைத் தலைவர் நோட்டீஸ் விவகாரம்: பைலட் தரப்பு மனு மீது நாளை விசாரணை

சச்சின் பைலட் உள்பட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு தகுதி நீக்கம் தொடர்பாக ராஜஸ்தான் பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
சச்சின் பைலட் உள்பட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு தகுதி நீக்கம் தொடர்பாக ராஜஸ்தான் பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
பகிர்:


சச்சின் பைலட் உள்பட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு தகுதி நீக்கம் தொடர்பாக ராஜஸ்தான் பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரவுள்ளது.

சச்சின் பைலட் தரப்பில் தாக்கல் செய்த மனுவானது இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணை வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே, மனுவில் திருத்தம் மேற்கொள்ள மனுதாரர்கள் விரும்புவதால், அவகாசம் கோரி வாதாடினார். 

இதையடுத்து, மாலை 5 மணியளவில் சச்சின் பைலட் தரப்பு திருத்தம் செய்யப்பட்ட மனுவைத் தாக்கல் செய்தது. அப்போது, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமிப்பதற்காக தலைமை நீதிபதி இந்திரஜித் மஹந்திக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் தலைமை கொறடா மகேஷ் ஜோஷியின் வழக்கறிஞர், இந்த விவகாரம் மாலை 7.30 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றார். ஆனால், அப்போது 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூடவில்லை. எனவே, விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த மனு மீதான விசாரணை தற்போது நாளை நண்பகல் 1 மணிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில், சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ-க்களும் பதிலளிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியதற்கான அவகாசமும் நாளை நிறைவடைகிறது.   

இந்த வழக்கில் இரண்டு தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்கள் வாதாடுகின்றனர். பேரவைத் தலைவர் அலுவலகம் சார்பாக அபிஷேக் மனு சிங்வி ஆஜராகிறார். மத்தியில் ஆளும் பாஜகவிற்காக கடந்த காலங்களில் வாதாடிய ஹரீஷ் சால்வே மற்றும் முகுல் ரோத்தகி ஆகியோர் பைலட் தரப்பு சார்பாக ஆஜராகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →