கோப்புப்படம் 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சம்: ஒரேநாளில் 178 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று (திங்கள்கிழமை) ஒரேநாளில் 178 பேர் பலியாகியுள்ளனர்.

DIN


மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று (திங்கள்கிழமை) ஒரேநாளில் 178 பேர் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய இன்றைய அறிவிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 2,786 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,10,744 ஆக உயர்ந்துள்ளது. இதில் 56,049 பேர் குணமடைந்துள்ளனர். 4,128 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பை:

மும்பையில் இன்று புதிதாக 1,066 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 58 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 59,201 ஆகவும், பலி எண்ணிக்கை 2,248 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 30,125 பேர் குணமடைந்துள்ளனர். 26,828 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT