கோப்புப்படம் 
இந்தியா

லடாக் எல்லைப் பிரச்னை: இந்தியா - சீனா மீண்டும் பேச்சு

சீனாவின் அழைப்பினை ஏற்று லடாக் எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்திய- சீன உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

DIN

சீனாவின் அழைப்பினை ஏற்று லடாக் எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்திய- சீன உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீனப் படைகள் மோதலை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இன்று காலை முப்படைத் தளபதிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர், எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருந்தார். 

இதையடுத்து, லடாக் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்த நிலையில் தற்போது இந்திய- சீன உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இரு நாட்டுப் படைகளின் ராணுவ மேஜர் ஜெனரல் அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திங்கள்கிழமை இரவு இந்திய - சீன மோதலுக்கு முன்னதாகவும், படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக இரு நாட்டுப் படைகளின் ராணுவ மேஜர் ஜெனரல் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT