முகப்பு
இந்தியா

மூன்றாவது நாளாக மிசோரமில் இன்றும் லேசான நிலநடுக்கம்

மிசோரமில் கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், இன்று காலை 8 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
மூன்றாவது நாளாக மிசோரமில் இன்றும் லேசான நிலநடுக்கம்
பகிர்:

மிசோரமில் கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், இன்று காலை 8 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மிசோரம் மாநிலத்தில் இன்று காலை 8.02 மணியளவில்  31 கி.மீ. தெற்கு - தென் மேற்கே சாம்பாய் பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது.

மிசோராமில் கடந்த ஞாயிறு மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருந்தது. இதுதொடர்பாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவலில், ‘தலைநகர் ஐசாவலில் இருந்து 25 கிலோமீட்டர்  கிழக்கு – வடகிழக்கு திசையில், ஞாயிறு மாலை 4.16 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு தொடர்ந்து இரண்டாம் முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 எனப் பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. 
 
முழு கட்டுரையைப் படிக்க →