காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 
இந்தியா

கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது: ராகுல் காந்தி

கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

DIN

கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. 

பொது முடக்க காலத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு வரைபடம் ஒன்றை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனா பரவல், பெட்ரோல்- டீசல் விலை உயர்வு ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது. நாட்டில் கரோனா பாதிப்பு, பெட்ரோல்- டீசல் விலை இரண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதை ஒரு வரைபடம் மூலமாக குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

பாஜகஉறவு முறிந்தது! கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணி அறிவிப்பு!-பண்ருட்டி ராமச்சந்திரன்

அறிவுசார் திட்டம் என்றாலே ஆக்கிரமிப்பு! ஆற்றுப்படுகையில் எதற்கு அரசின் திட்டங்கள்?அன்புமணி பேச்சு!

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT