முகப்பு
இந்தியா

நாட்டில் கடந்த 20 மணி நேரத்தில் என்ன நடந்தது? கரோனா நிலவரம்

இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 16,922 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 418 பேர் பலியாகியுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,837 பேருக்கு கரோனா
பகிர்:


இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 16,922 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 418 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால், நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதிப்பு 4,73,105 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 14,894 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 20 மணி நேரத்தில் நாட்டில் கரோனா தொடர்பான செய்திகள் மற்றும் பொது முடக்கம் தொடர்பான செய்திகளை பார்க்கலாம்.

  • தில்லியில் புதிதாக 3788 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு கரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை எட்டிவிட்டது. 
  • தெலங்கானாவுக்கு ரெம்டேசிவிர் மருந்து கிடைக்கப்பெற்றது.
  • கரோனா பரவல் மற்றும் பொது முடக்கக் காலத்தில் கர்நாடகத்தில் 2879 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
  • மேற்கு வங்கத்தில் ஜூலை 31-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • பஞ்சாப் மாநிலத்தில் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
  • மும்பை மகாலட்சுமி ரேஸ் கோர்ஸ் மைதானம் கரோனா வார்டாக மாற்றம்.
  • கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக விளம்பரம் செய்த பாபா ராம்தேவ் மீது பிகார் நீதிமன்றத்தில் வழக்கு.
  • கேரளத்தில் 10 நாள்கள் பணி, 10 நாள்கள் ஓய்வு.. மருத்துவப் பணியாளர்களுக்கு பணித்திட்டம் அறிமுகம்
  • சென்னை தண்டையார்பேட்டையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இரண்டு நாள்களில் 24-ல் இருந்து 38 ஆக உயர்வு.
  • ஆலந்தூர் மண்டலத்திலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டியது.
  • சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,837 பேருக்கு கரோனா.
  • செங்கல்பட்டில் புதிதாக 68 பேருக்கு கரோனா தொற்று உறுதி.
     
முழு கட்டுரையைப் படிக்க →