முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் பலி

மும்பையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 57 வயது காவல்துறை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர். 

Updated On : 16 மே, 2020 at 12:31 PM
பகிர்:

மும்பையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 57 வயது காவல்துறை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர். 

கரோனாவால் பலியானவர் மதுகர் மானே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்துத் துறையில் காவலராக பணியாற்றி வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், 15 நாட்கள் விடுப்பில் சென்றிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

மதுகர் மானே (57) மறைவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மும்பை காவல்துறை வருத்தம் தெரிவித்துள்ளனர். அவரது ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரின் குடும்பத்துக்காக நாங்கள் பிராத்தித்து கொள்கிறோம் என்று மும்பை காவல்துறை டிவிட்டரில் தெரிவித்துள்ளது. 

Advertisement

மும்பையில் ஏழு மற்றும் சோலாப்பூர், நாசிக் மற்றும் புணேவில் தலா ஒருவர் என மகாராஷ்டிராவில் இதுவரை, 10 காவலர்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.