இந்தியா

தற்சார்பு இந்தியா திட்டத்தின் 5 ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

DIN


பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

இதில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்களில்  யார் யாருக்கு எவ்வளவு நிதி என்பது குறித்த அறிவிப்புகளை அறிவிக்கிறார். மேலும், நிலம், தொழிலாளர் நலன், பணப்புழக்கம் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகவிருக்கின்றன. 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகளுடன் உணவுக் கழகமும் இணைந்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.

சர்வதேச அளவிலான இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் மீண்டு வருவோம்.

இந்தியா மிக சிக்கலான ஒரு கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT