இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் 1,15,364 பேருக்கு கரோனா பரிசோதனை: ஐசிஎம்ஆர்

ANI


புது தில்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,15,364 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

மேலும், கரோனா பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை 28,34,798 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுளள்து என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

இந்தியாவில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6,654 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதே சமயம், 24 மணி நேரத்தில் 137 பேர் பலியானதை அடுத்து, நாட்டில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,720 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  51 ஆயிரம் பேர் குணமடைந்துள்ள நிலையில் 69 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT