இந்தியா

அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக்கோரி பாஜகவினர் போராட்டம்

DIN

தில்லியில் காற்று மாசுபாடு மற்றும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக் கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல் உள்பட ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டு முதல்வருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சாலையோர மரங்களில் தண்ணீர் தெளித்தல், சிக்னலில் வாகனங்களை நிறுத்திவைத்தல், காடுகள் வளர்ப்பை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டுள்ளது.

இதேபோன்று தற்போது மூன்றாவது முறையாக கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிரித்தல், பொது இடங்களில் பரிசோதனைகளை இரட்டிப்பாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (வியாழக்கிழமை) அரவிந்த் கேஜரிவால் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டமும் நடைபெற்றது.

இதனிடையே தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லி பாஜக மாநிலத் தலைவர் விஜய் கோயல் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஏராளமான பாஜக தொண்டர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கலந்துகொண்டு கேஜரிவாலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT