ஹாத்ரஸ் சம்பவம்: பாஜக எம்.எல்.ஏ. கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு
ஹாத்ரஸ் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து பாஜக எம்.பி. சுரேந்திர சிங் கூறிய கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாஹாத்ரஸ் சம்பவம்: பாஜக எம்.எல்.ஏ. கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு
ஹாத்ரஸ் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து பாஜக எம்.பி. சுரேந்திர சிங் கூறிய கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஹாத்ரஸ் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து பாஜக எம்.பி. சுரேந்திர சிங் கூறிய கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் 22 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு, மிகக் கடுமையாக தாக்கப்பட்டு பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சுரேந்திர சிங், இளம் பெண்களின் பெற்றோர்கள், தங்களது மகள்களுக்கு நன்னடத்தையையும் கலாசாரத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பலாத்கார சம்பவங்கள் தடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
அதாவது, பலாத்காரம் போன்ற சம்பவங்கள் அரசாலோ, கத்தியாலோ தடுத்துவிட முடியாது, நமது கலாசாரம் மற்றும் அதன் மதிப்பு மூலமாகவே தடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது, ஆனால், பெண் குழந்தைகளின் பெற்றோர்தான் அவர்களுக்கு அடக்கமாக இருப்பதையும், நன்னடத்தையையும் கற்பிக்க வேண்டும், அப்போதுதான் கலாசாரம் மற்றும் அரசு மூலம் நமது நாடு மிக அழகான தேசமாக மாறும் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்கள் பொதுமக்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஹாத்ரஸ் சம்பவத்தை உத்தரப்பிரதேச அரசு கையாண்ட விதம் குறித்து கடுமையான விமரிசனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக எம்எல்ஏவின் கருத்து கடும் விமரிசனங்களை பெற்று வருகிறது.