இந்தியா

'மகாராஷ்டிரத்தில் வெள்ள பாதிப்பிற்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்'

DIN

மகாராஷ்டிரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பில் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் நிரம்பிய அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளதால், பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு மகாராஷ்டிரத்தின் புணே, சோலாப்பூர், சாங்லி மற்றும் சதாரா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர், நிதி நிவாரணம் தொடர்பான பிரச்சினையை முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுடன் கலந்துரையாடுவதாகவும், இதற்கு மத்திய அரசு உதவி புரிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், ''தொடர் கனமழையால் ஓரிரு ஆண்டுகளாக மீண்டும் பயிர்களை விதைக்க முடியாத வகையில் நிலம் அழிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால் விவசாய பொருளாதாரம் முற்றிலும் அழிந்துள்ளது இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தொகையை விடுவிக்க வேண்டும்'' என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT