இந்தியா

துப்பாக்கியை துடைத்தபோது குண்டு பாய்ந்தது: ஐபிஎஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி

DIN

பெங்களூருவில் தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்தபோது அது எதிர்பாராதவிதமாக வெடித்து, மார்பில் குண்டு பாய்ந்ததில், படுகாயமடைந்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.பி. ஷர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநில காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி ஷர்மா, புதன்கிழமை மாலை, தனது வீட்டில் கைத்துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

59 வயதாகும் ஷர்மா, குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை சுத்தம் செய்தபோது இது நிகழ்ந்ததாகவும், வீட்டில் துப்பாக்கிச் சத்தம் கேட்ட ஷர்மாவின் மகள், உடனடியாக ஊழியர்களின் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மார்பில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஷர்மா, தவறுதலாக துப்பாக்கி இயங்கியதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும் இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT