நாகாலாந்தில் மார்ச் 22 முதல் தொடக்கப் பள்ளிகள் திறப்பு 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 8ஆம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. 

எனினும் கரோனா தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு சரிவர நடைபெறாத காரணத்தால் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக மகாராஷ்டிர மாநில பள்ளிக்கல்வித்துறை சனிக்கிழமை அறிவித்தது.

அதேசமயம் இதர வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் வீட்டுமனைப் பட்டா கேட்டு காத்திருப்புப் போராட்டம்

போதை மீட்பு மையத்தில் தொழிலாளி தற்கொலை

மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோரையாறு கரையில் சாலை அமைச்சா் கே.என். நேரு

கரூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 6.33 கோடியில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்

வெங்கடேஸ்வராமெட்ரிக் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT