இந்தியா

கரோனா தடுப்பூசியை அதிகரிக்க டிக்கா உற்சவ் தொடங்கப்படும்: முதல்வர்

கரோனா தடுப்பூசியை அதிகரிக்கும் வகையில் கோவாவில் "டிக்கா உற்சவ்" ஒன்றை அம்மாநில அரசு தொடங்க உள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

IANS

கரோனா தடுப்பூசியை அதிகரிக்கும் வகையில் கோவாவில் "டிக்கா உற்சவ்" ஒன்றை அம்மாநில அரசு தொடங்க உள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்று அந்தந்த மாநில அரசு வலியுறுத்தி வருகின்றது. 

இதுதொடர்பாக முதல்வர் கூறியதாவது, 

தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் கோவாவில் ஏப்ரல் 11 முதல் 14 வரை டிக்கா உற்சவ் நடத்தப்படுகிறது. இதில், பஞ்சாயத்து மட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும். 

இந்த உச்சவமானது கோவாவில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கொண்டாடப்படும். இதில் கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 

கரோனா நெருக்கடியைச் சமாளிக்கத் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்வதே ஒரே தீர்வு தவிர, பொதுமுடக்கம் அல்ல. 

கோவா சுற்றுலாத் தலமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படமாட்டது  என்று அவர் கூறியுள்ளார். 

ஆனால், மக்கள் தேவையற்ற காரணங்களுக்காக வெளியேறுவதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் இரவு நேரங்களில் வெளியில் வராமல் இருப்பது நல்லது என்று அவர் கூறியுள்ளார். 

கோவாவில் ஒரேநாளில் 582 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 3,331 பேர் மருத்துவமனையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

SCROLL FOR NEXT