புதிய உச்சத்தில் மகாராஷ்டிரம்: மேலும் 58,993 பேருக்கு கரோனா தொற்று
மகாராஷ்டிரத்தில் இன்று ஒரேநாளில் 58,993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று ஒரேநாளில் 58,993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் புதிதாக இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 58,993 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32,88,540-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 45,391 போ் இன்று வீடு திரும்பியுள்ளனா். இதுவரை மாநிலத்தில் 26,95,148 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 5,34,603 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 301 போ் இன்று பலியாகியுள்ளனா். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 57,329ஆக உயர்ந்துள்ளது.