முகப்பு
இந்தியா

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கரோனா தொற்று

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக பாஜக துணைத் தலைவரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

கரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். 

என்னுடன் இருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →