கரோனா: நாட்டில் இன்றைய நிலவரம் அறிய
நாட்டில் இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 879 பேர் கரோனாவுக்கு பலியாகினர்.
புது தில்லி: நாட்டில் இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 879 பேர் கரோனாவுக்கு பலியாகினர்.
நாட்டில் நாள்தோறும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 1.61 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கரோனா பாதித்த 879 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,71,058 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 34 நாள்களாக தொடர்ந்து கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சையில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கை 12.64 லட்சமாக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 9.24 சதவீதமாகும்.
கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி மிகக் குறைந்த அளவாக 1.35 லட்சம் பேரும், மிக அதிக அளவாக 2020 செப்டம்பர் 18-ல் 10.17 லட்சமுமாக இருந்தது.
நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,22,53,697 ஆக உள்ளது.