வங்கதேசத்தில் ஊரடங்கு நீட்டிப்பு
கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.
கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.
வங்க தேசத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வியாழக்கிழமை முதல் மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று தலைமை தகவல் அதிகாரி சுரோத் குமார் தெரிவித்தார்.
கரோனா பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 9 நாள்களுக்கு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வங்கதேசம் முழுவதும் போக்குவரத்து ஆகியவற்றை ரத்து செய்தது.
Advertisement
நிலைமை மோசமடைந்ததால் மேலும் ஊரடங்கு புதன்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,462 பேருக்குத் தொற்றும், 102 இறப்பும் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 7,81,950 பேர் பாதிப்பும், 10,385 பலியும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.