முகப்பு
இந்தியா

தொற்று பாதிப்பு சற்று குறைந்தது; அறிந்து கொள்ள வேண்டிய கரோனா நிலவரம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,761 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
தொற்று பாதிப்பு சற்றுகுறைந்தது; அறிந்து கொள்ள வேண்டிய கரோனா நிலவரம்
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,761 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். 

கரோனா பேரிடர் தொடங்கியது முதலே நேற்று ஒரு நாள் பாதிப்பு முதல் முறையாக 2.73 லட்சத்தைத் தொட்டது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக பதிவான புதிய பாதிப்பை விட இன்று தொற்று பாதிப்பு குறைந்து பதிவாகியுள்ளது. ஆனால், இறப்பு எண்ணிக்கை நேற்று 1,619  ஆக இருந்த நிலையில் இன்று 1,761 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் நாள்தோறும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 2.59 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரே நாளில் 1,54,761 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 20.31 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் கரோனா பாதித்த 1,761 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 12,71,29,113 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →