முகப்பு
இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
கரோனா தடுப்பூசி மருந்து
பகிர்:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 

இந்தியா 97 நாள்களில் 13.23 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி, உலகிலேயே அதிவேகமாகத் தடுப்பூசி செலுத்தும் நாடு என்ற நிலையை எட்டியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31,47,782 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

இன்று காலை 7 மணி வரை 19,38,184 முகாம்களில் 13,54,78,420 தடுப்பூசி மருத்துகள் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் எட்டு மாநிலங்களில் இதுவரை 59.08 சதவீதம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 புதிய கரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மகாராஷ்டிரத்தில் தினசரி பாதிப்பு 67,013 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் 34,254 ஆகவும், கேரளத்தில் 26,995 ஆகவும் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் தொற்று பாதித்து 24,28,616 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,37,188 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், வியாழக்கிழமை நிலவரப்படி 1,93,279 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து நாட்டில் மொத்தம் 1,36,48,159 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 2,263 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →