இந்தியா

நாட்டில் இதுவரை இல்லாத அளவில் கரோனா பாதிப்பு 

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக புதிதாக 3,46,786 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,624 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். 

நாட்டில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 2,624 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,89,544 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் நாள்தோறும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 3.46 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,66,10,481 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கரோனா பாதித்த 2,624 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,89,544 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 2.16 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,38,67,997. தற்போது 25,52,941 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தியாவில் இதுவரை 13,83,79,832 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT