முகப்பு
இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை 

காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டத்தில் சந்தாஜி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவலை அறிந்துகொண்டு  பாதுகாப்புப் படை வீரர்கள் சோதனை நடத்தினர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை 
பகிர்:

காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டத்தில் சந்தாஜி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவலை அறிந்துகொண்டு  பாதுகாப்புப் படை வீரர்கள் சோதனை நடத்தினர்.

இதில் அப்பகுதியில் பழைய கட்டடம் ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதி தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுகுறித்து காவல்துறை  சார்பில் அளித்த தகவலில் ' பதுங்கியிருந்த  தீவிரவாதி தேடுதலின் போது  பாதுகாப்புப் படை வீரர்களை தாக்க ஆரம்பித்ததும் பதில் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் இறந்த தீவிரவாதியைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை ' என்று தெரிவித்தனர் . 

தீவிரவாதி வைத்திருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →