இந்தியா

‘இதுவரை 5.62 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு

DIN

நாட்டில் இதுவரை 50.62 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 50.62 கோடிக்கும் அதிகமானோருக்கு (50,62,18,296) கரோனா தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி, முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது.

இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 50 லட்சத்திற்கும் அதிகமான (50,00,384) தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

18-44 வயது பிரிவில் இதுவரை 27,55,447 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 5,08,616 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் இன்று பெற்றனர்.

மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மகாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை 18-44 வயது பிரிவினருக்கு இது வரை செலுத்தியுள்ளன.

நாட்டில் இதுவரை மொத்தம் 39,38,95,801 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 11,23,22,495 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 1,01,14,853 பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 7,58,284 நபர்கள் இரண்டாம் தவணை இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

தலைநகரில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்! வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை

‘ஜாமீன் நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தை நாடுகிறாா் சிசோடியா’

மக்களவைத் தோ்தல்: முதல் 2 கட்டங்களில் முறையே 66.14%, 66.71% வாக்குகள் பதிவு

தில்லிவாசிகள் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்கிறாா்கள் - அமைச்சா் அதிஷி

SCROLL FOR NEXT